இலவச உதைகள்
1) நேரடி இலவச உதை
நேரடி உதையின் போது பந்தை நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ளலாம்.
நேரடி இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்
2) நேரடியற்ற இலவச உதை
நேரடியற்ற இலவச உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற முடியாது.
அவ்வாறு கோல்க்கம்பங்களுக்கு இடையால் பந்து சென்றால் எதிரணியிற்கு வெளி உதை வ்ழங்கப்படும்.
நேரடியற்ற இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக எற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்.
இலவச உதையின் போது பந்து மைதானத்தில் அசையா நிலையில் இருக்க வேண்டும்.
முதலில் உதைத்தவர் மீண்டும் உதைப்பதற்கு முதலில் வேறு ஒரு வீரரால் பந்து உதைக்கப்பட்டிருக்க வேண்டும்.
*ஒரு அணியினருக்கு அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் இலவச உதை வழங்கப்பட்டால்...
சகல எதிரணி வீரர்களும் 9 மீ தூரத்திலும்
16 மீ பிரதேசத்திற்கு வெளியேயும் நிற்க வேண்டும்.
16 மீ பிரதேசத்தை விட்டுப் பந்து வெளியேறிய பின்னரே மற்றவர்கள் அதை உதைக்கலாம்.
5 மீ பிரதேசத்தில் பந்தை அதன் எந்தப் புள்ளியில் வைத்தும் உதைக்கலாம்.
*ஒரு அணியினருக்கு எதிராக அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் நேரடியற்ற இலவச உதை வழங்கப்பட்டால்...
எதிரணியினர் 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்
5 மீ பிரதேசத்தில் கோல்க் கோடுகளுக்குச் சமாந்தரமான அதன் கோட்டில் (விதிமுறை மீறல் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையாக்) வைத்து உதைக்கப்படும்.
இலவச உதையின் போது எதிரணியினர் 9 மீ தூரத்தக் கடைப்பிடிக்காமல் முனோக்கி நகர்ந்திருந்தால் இலவச உதை மீண்டும் உதைக்கப்படும்.(எச்சரிக்கை அட்டையும்)
16 மீ க்குள் இருந்து இலவச உதை நடாத்தப்பட்டு பந்து 16 மீ ப்ரதேசத்தை விட்டு வெளியேறாவிட்டால் (வெள்ளம்,காற்று,பனிக்கட்டி)
அந்த உதை மீண்டும் உதைக்கப்படும்.
இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் உதைக்க முன்னர் மீண்டும் உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்
இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் இதைக்க முன்னர் பந்தைக் கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்
16 மீ பிரதேசத்தில் அவ்வாறு கைகளால் பிடித்தால்(கோல்க் காப்பாளர் தவிர) எதிரணியினருக்கு தண்டனை உதை வழங்கப்படும்.
கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்தில் அவ்வாறு உதைத்தாலோ கைகளால் பிடித்தாலோ எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.
கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்திற்கு வெளியே அவ்வாறு கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக