திங்கள், 27 டிசம்பர், 2010


உதைபந்தாட்டத்தின் போது ஒரு வீரர் இன்னொருவர் மீது ஏதாவது பொருளால் (பந்து உட்பட) எறிந்தால்...

1.எதுவித எதிர் விழைவுகளும் இல்லாமல் எறிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும்
2.எதிர் விழைவுகள் ஏற்படக் கூடிய வகையில் வன்மையாக அல்லது அதிகூடிய வலுவுடன் எறிந்தால் சிவப்பு அட்டை காட்டப்பட வேண்டும்.

ஒரு வீரர் 16 மீ எல்லைக்குள் நிற்கும் ஒருவர் 16 மீ எல்லைக்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்தால் தாக்காப் பட்ட இட்த்தில் வைத்து நேரடியான உதை வழங்கப்படும். (16 மீ எல்லைக்கு வெளியே)

ஒரு வீரர் 16 மீ எல்லைக்கு வெளியே இருந்து எறிந்து உள்ளே நிற்பவரைத் தாக்கினால் தண்டனை உதை வழங்கப்படும்.

ஒரு வீரர் மைதானத்தின் உள்ளே நின்று மைதானத்திற்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியிற்கு நேரடியற்ற உதை வழங்கப்பட வேண்டும்.கடைசியாகப் பந்து விளையாட்டில் இருந்த இடத்தில் இருந்து நேரடியற்ற உதை வழங்கப்படும்.

ஒரு வீரர் மைதானத்திற்கு வெளியே நின்று மைதானத்தில் நிற்கும் ஒரு எதிரணி வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் தாக்கப்பட்ட இடத்தில் வைத்து நேரடியான உதை எதிரணிக்கு வழங்கப்படும். 16 மீ எல்லைக்குள் தாக்கப்பட்டால் தண்டனை உதை வழங்கப்பட வேண்டும்.

மாற்று வீரர் ஒருவர் மைதானத்தின் வெளியே இருந்து மைதானத்தின் உள்ளே நிற்கும் ஒரு வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியினருக்கு, கடைசியாகப் பந்து விளையாட்டில் இருந்த இடத்தில் இருந்து, நேரடியற்ற உதை வழங்கப்பட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக