திங்கள், 27 டிசம்பர், 2010


10. ஒரு கோல் எப்போது அங்கீகரிக்கப் படுகின்றது.

ஒரு விளையாட்டு வீரர் பந்து விளையட்டில் இருக்கும் போது ஒரு கோலை உதைத்தால்

அந்தப் பந்து தனது முழு உருவத்தாலும் கோல்க் கோடுகளை இரு கோல்க் கம்பங்களுக்கும் இடையாகத் தாண்டியிருக்க வேண்டும்.

அவர் உதைக்கு முன் மைதானத்தில் அவரோ அல்லது அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் எவரும் விதிமுறைகளை மீறியிருக்கக் கூடாது.

பந்து முழு உருவத்தாலும் கோல்க்கம்பங்களுக்கிடையால் கோல்க்கோட்டினைத் தாண்டியதா இல்லையா என்று மத்தியஸ்த்தரால் முழுமையாக அறிய முடியாவிட்டால் உதவி மத்தியஸ்த்தர்களின் உதவிய நாட வேண்டும்.

மத்தியஸ்த்தர் தனி ஒருவராக இருந்தால் மேலே கூறிய குழப்ப நிலையில் தொடர்ந்து விளையாடுவதற்கான சைகையை விளையாட்டு வீரர்களுக்குத் தெளிவாகக் காட்ட வேண்டும்.

ஒரு கோலை அங்கீகரிப்பதற்காக மத்தியஸ்த்தர் எப்போதும் தனது கருவியால் சைகை செய்ய வேண்டியதில்லை.

குழப்பமான நிலையிலும் மத்தியஸ்த்தரால் அது கோல் என்று அறியப்பட்டால் அவ்ர் தனது விசிலால் சத்தமிட்டுத் தெளிவாக அந்தக் கோலை அங்கீகரிக்க வேண்டும்.

கோல் உதைக்கும் போது மைதானத்தில் மேலதிகமாக ஒருவர் இருந்தால்....என்பதற்கு மேலே 3.விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையில் பதில் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக