திங்கள், 27 டிசம்பர், 2010

பாகம் உதைபந்தாட்ட விதிகள்


8. விளையாட்டின் ஆரம்பம்

உதைபந்தாட்டம் ஆரம்பிக்க முன்னர் மத்தியஸ்த்தரால் நாணயம் எறியப்பட்டு எந்தக் குழு மைதானத்தின் எந்தப் பக்கத்திலிருந்து விளையாடுவது என்று தீர்மானிக்கப்படும்.
நாணயம் எறிதலில் வெற்றி பெற்ற குழு விளயாட்டை ஆரம்பிக்க முடியாது.

விளையாட்டு ஆரம்ப உதையுடன் தொடங்கும்.
ஆரம்ப உதையின் போது பந்து அசையாமல் மத்திய புள்ளியில் இருக்கும் போது முன்னோக்கி உதைக்கப்படும்.
முதலில் உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைக்கக்கூடாது.

ஆரம்ப உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்கொள்ளலாம்.

-விளையாட்டின் ஆரம்பத்திலும்
-ஏதாவது ஒரு அணி கோல்களை உதைத்தாலும்
-இரண்டாவது விளையாட்டுப் பகுதி ஆரம்பிக்கும் போதும்
-மேலதிகமான காலத்தின் ஆரம்பத்தின் போதும், பக்கம் மாறும் போதும்
ஆரம்ப உதை வழங்கப்படும்.

ஆரம்ப உதையின் போது உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற இலவச உதை வழங்கப்படும்.
வேறு எந்த விதமான விதிமுறை மீறல்கள் நடைபெற்றாலும் ஆரம்ப உதை மீண்டும் நடைபெறும்.(பந்தைப் பின்னோக்கி உதைத்தல்,மத்தியஸ்த்தரின் சைகைக்குக் காத்திராமல் ஆரம்பித்தல்,ஒரு வீரர் எதிரணியின் எல்லைக்குள் நிற்றல் போன்றவை.)


மத்தியஸ்த்தர் பந்து.

விளையாட்டு வீரர்கள் விதிமுறைகளை மீறாமல் எதாவது தகுந்த காரணங்களுக்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டு மீண்டும் தொடரப்படும்.

மத்தியஸ்த்தர் இரு அணிகளையும் சேர்ந்த வீரர்களுக்கும் அருகாமையில் வைத்துப் பந்தை தன் கைகளினால் இடுப்பளவு உயரத்திலிருந்து மைதானத்தை நோக்கிப் போடுவார்.பந்து நிலத்தை முட்டும் வரை யாரும் உதைக்கக் கூடாது. அப்படி உதைத்தால் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.

மத்தியஸ்த்தர் பந்து மைதானத்தில் விழுந்து எந்த வீரர்களாலும் உதைக்கப்படாமல் மைதானத்தை விட்டு வெளியே சென்றாலும் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக