திங்கள், 27 டிசம்பர், 2010

M
வெற்றியீட்டும் அணியைத் தீர்மானிக்கும் முறை

உதைபந்தாட்டத்தின் சாதரணமான 90 நிமிட நேரத்தில், விளையாடும் இரு அணியினரும் கோல்களை உதைக்காமல் விட்டாலோ அல்லது சமனான அளவில் கோல்களை உதைத்திருந்தாலோ,வெற்றியாளர் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தால் விளையாட்டின் நேரம் நீடிக்கப்படும்.

நீடிக்கப்படும் நேரம் அதி கூடியதாக 30 நிமிடங்கள் இருக்கும்.
முதல் 15 நிமிடங்களின் பின்னர் அணியினர் மைதானத்தில் தங்கள் பகுதியை மாற்றிக் கொள்வார்கள்.

நீடிக்கப்பட்ட நேரத்திலும் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாவிட்டால்
11 மீ உதை வழங்கப்படும்.

-உதைக்கப்படும் பகுதியை (கோல்க்கம்பங்களை) மத்தியஸ்த்தரே தீர்மானிப்பார்.
- மத்தியஸ்த்தரால் நாணயம் எறிந்து முதலில் யார் 11 மீ உதையை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்படும்
-கடைசி வரை மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்களே 11 மீ உதையில் பங்கு பற்றலாம்.
-விளையாட்டின் நேர நீடிப்பின் முடிவில் ஒரு அணியில் வீரர்கள் குறைக்கப்பட்டு இருந்தால்
11 மீ உதையில் அதே எண்ணிக்கையிலான வீரர்களே எதிரணியிலும் பங்கு பற்றலாம்.

** உதாரணம்: 120 நிமிட விளையாட்டில் ஒரு அணியில் இருவருக்கு சிவப்பு அட்டையும் எதிரணியில் ஒருவருக்கு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டிருந்தால் ஒவ்வொரு அணியிலும் சமனான எண்ணிக்கையில் தலா 9 வீரர்களே (கோல்க் காப்பாளர் உட்பட )11 மீ உதையில் பங்கு பற்றாலாம் **

-முதலில் ஒவ்வொரு அணிக்கும் தலா 5 உதைகள் வழங்கப்படும்.

-அப்படியும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படா விட்டால் ஒர் அணி வெற்றி பெறும் வரை 11 மீ உதை தொடர்ந்து வழங்கப்படும்.

- 11 மீ உதையின் போது கோல்க் காப்பளர் மட்டும் அவருக்கு ஏற்படும் காயங்கள் காரணமாகத் தொடர்ந்து விளையாட முடியாவிட்டால் மாற்றப்படலாம்.(அதுவரை அந்த அணியினர் தங்கள் மாற்றும் எண்ணிக்கையை மீறாவிட்டால் மட்டும்)

- 11 மீ உதையின் போது கோல்க்காப்பாளர் எந்த நேரத்திலும் மைதானத்தில் இருக்கும் தன் அணி வீரர்களுடன் தன்னை மாற்றிக் கொள்ளலாம்.

-தன் அணியில் மைதானத்தில் இருக்கும் சகல வீரர்களும் பங்கு பற்றிய பின்னரே ஒரு வீரர் இரண்டாவது முறையாக 11 மீ உதையில் பங்கு பற்றலாம்

11 மீ உதையின் போது ஒரு அணியின் வீரர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதற்காக மற்றைய அணியிலிருந்து ஒரு வீரர் குறைக்கப்பட வேண்டியதில்லை.
(11 மீ உதையின் ஆரம்பத்தில் மட்டுமே வீரர்கள் சமனாக்கப்படுவார்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக