திங்கள், 27 டிசம்பர், 2010

14. தண்டனை உதை (பனால்டி)

ஒரு அணியினருக்கு எதிராக தண்டனை உதை அளிப்பதற்கு முதல் மத்திய்ஸ்த்தர் அவதானிக்க வேண்டியவை:
1.உதைபந்தட்டாத்தில் பந்து விளையாட்டில் இருக்க வேண்டும்
2.விதிமுறை மீறல் 16 மீ எல்லைக்குள் நடைபெற்றிருக்க வேண்டும்
3.ஒரு விளையாட்டு வீரர் எதிரணி வீரருக்கு எதிராக விதிமுறைகளை மீறியிருக்க வேண்டும்.

கீழ்வரும் 10 காரணங்களுக்காக தண்டனை உதை வழங்கப்படும்
1.உதைத்தால்,
2.கால்களைக் குறூக்கே வைத்தால்,
3.அவரின் மேல் பாய்ந்தால்,
4.தோழோடு பலமாக முட்டினால்,
5.மோதினால்,
6.தள்ளினால்,
7.பிடித்து இழுத்தால்,
8.கைகளால் பந்தைப் பிடித்தால்,(16 மீ எல்லைக்குள் கோல்க் காப்பாளர் விதிவிலக்கு)
9.அடித்தால்,அடிக்க முயற்சித்தால்,
10.துப்பினால்



தண்டனை உதையின் போது நேரடியாகவோ நேரடியற்றோ விதிமுறைகளுக்கு அமைவாகப் பந்தை உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்க் கொள்ளலாம்.

தண்டனை உதையின் போது.....

1)பந்து முன்னோக்கி உதைக்கப்பட வேண்டும்
2)உதைப்பவர் தனது ஓட்டத்தை அல்லது நடையை இடை நிறுத்தாமல் ஒரே நகர்வில் உதைக்க வேண்டும்
3)உதைப்பவர் மத்தியஸ்த்தருக்கும் கோல்க் காப்பாளருக்கும் தன்னை விளக்கமாக அடையாளப்படுத்த வேண்டும்
4)கோல்க் காப்பாளர் உதைப்பவரை நோக்கியபடி(அவர் உதைக்கும் வரை)கோல்க் கோடுகளில் எதாவது ஒரு புள்ளியைல் தனது காலை வைத்திருக்க வேண்டும். (கோல்க் கோடுகளுக்கிடையில் அசையலாம்)
5)மற்றய வீரர்கள் மைதானத்தில்,16 மீ பிரதேசத்திற்கு வெளியே,தண்டனை உதைப் புள்ளிக்குப் பின்பாக,குறைந்தது 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்
6)உதைப்பதற்கு மத்தியஸ்த்தரின் அனுமதியைப் பெற வேண்டும்
7)உதைப்பவர் இரன்டு முறை தொடர்ந்து உதைக்க முடியாது
8)மத்தியஸ்த்தர் விதிமுறைகளைக் கவனித்து விளையாட்டைத் தொடர வேண்டும்.

மத்தியஸ்த்தர் அனுமதி வழங்கிய பின்னர் தண்டனை உதை நடைமுறைக்குள் வரும் முன்னர் விதிமுறைகளை மீறினால்....

1)உதைப்பவரோ அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறி உதைத்த பந்து கோலிற்குள் சென்றால் அது செல்லுபடியாகாது. தண்டனை உதை மீண்டும் உதைக்கப்பட வேண்டும்.
பந்து கோலிற்குள் செல்லாமல் விட்டால் விதிகளை மீறியதற்காக எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்

2)கோல்க்காப்பாளரோ அல்லது அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறிப் பந்து கோலிற்குள் சென்றால் அது கோல் என் அங்கீகரிக்கப்படும்.
கோலிற்குள் செல்லாவிட்டால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும்.

3)இரு அணியினரும் ஒரே நேரத்தில் விதிமுறைகளை மீறினால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும் .

தண்டனை உதையை உதைப்பவர் தொடர்ந்து இருமுறை உதைத்தால்(வேறு வீரர்கள் உதைக்கும் முன்னர்) எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.

தண்டனை உதையை வெளி நபர்கள் தடுத்தால் மீண்டும் உதைக்கப்படும்.

தண்டனை உதையின் போது உதைப்பதற்குத் தன்னை அடையாளப்படுத்திய வீரரைத் தவிர்த்து வேறு வீரர் அடிக்க முற்பட்டால் அது உடனடியாக மத்தியஸ்த்தரால் நிறுத்தப் பட்டு அவருக்கு எச்சரிக்கை அட்டை காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக