திங்கள், 27 டிசம்பர், 2010

பாகம் உதைபந்தாட்ட விதிகள்

1) சிலசமயங்களில் கோல் காப்பாளர் பந்தைப் பிடித்து மீண்டும் உதைப்பதற்காக கொண்டு வரும்போதே தலையால் முட்டி பந்தை எதிரிகள் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இது அனுமதிக்கப் பட்டதா?



இதை அனுமதிக்ககூடாது. விளையாட்டுக்கு ஏற்காத விளையாட்டுமுறை என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.விளையாட்டு இடை நிறுத்தப் பட்டு அப்படி எடுக்க முற்பட்ட வீரருக்கு எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை வழங்கப்ப்டும்.

கோல்க் காப்பாளரின் அணிக்கு நேரடியற்ற இலவச உதை வழங்கப்பட்டு விளையாட்டுத் தொடரும்.


Quote
2) கோல் காப்பாளர் பந்தைக் கையால் பிடிக்க முடியாத சந்தர்ப்பம் ஏதாவது உள்ளதா? சில சமயங்களில் கையால் பிடிப்பதை விட்டுவிட்டு காலால் விளையாட/உதைக்க் முற்படுவதைப் பார்த்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்?



இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

ஒரு அணியின் விளையாட்டு வீரர்கள் திட்டமிட்டு பந்தை அவ்ர்களின் கோல்க் காப்பாளர்களை நோக்கி உதைக்கும் போதும்

வெளிக் கோடுகளில் இருந்து பந்தை கைகளினால் எறிந்து விளையாட்டை தொடரும்போது அது கோல்க் காப்பாளரை நோக்கித் திட்டமிட்டு அவருடைய அணி வீரர்களால் எறியப்பட்டாலும்

கோல்க் காப்பாளர் தனது கைகளினால் பந்தைத் தொடக் கூடாது.

விளையாட்டில் நேரத்தை வீணடிப்பவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட விதிமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக