திங்கள், 27 டிசம்பர், 2010

11.ஒதுங்கி நிற்றல்.

உதைபந்தாட்டத்தின் போது ஒரு அணியின் வீரர் எதிரணியின் மைதானப் பகுதிக்குள்
இருக்கும் கோல்க் கோடுகளுக்கு அண்மையாக, அந்த அணியின் கடைசி இரண்டு வீரர்களை விடவும் பந்தை விடவும் நெருக்கமாக நின்றால், ஒதுங்கி நிற்றல் எனப்படும்.

மேலே குறிப்பிட்டது போல மைதானத்தின் தங்களது அரைவாசிப் பகுதிக்குள் நின்றால் அது ஒதுங்கி நிற்பது ஆகாது.

ஒதுங்கி நிற்பது ஒரு விதிமுறை மீறல் அல்ல.
ஆனால் அப்படி ஒதுங்கி நிற்பவர்-
- விளையாட்டில் எந்த விதத்திலும் கலந்து கொள்ளும் போது- அது ஒரு விதிமுறை மீறல் எனக் கருதப்படுகின்றது.
ஒதுங்கி நிற்பவர் விளையாட்டில் கலந்து கொள்வது
பந்தை அடித்தல் அல்லது அடிக்க முற்படுதல்
தனது அசைவினால் எதிரணி வீரரைக் குழப்புதல்
கோல்க் காப்பாளரின் பார்வைக்குப் பந்தை மறைத்தல்
தனக்குச் சாதகமாகப் பந்தைப் பெற முயற்சித்தல்
என்பவையாகும்.

வெளி உதை
பக்கக் கோட்டினூடாக பந்தைக் கைகளால் எறிதல்
மூலை உதை
ஆகிய விளையாட்டின் தொடர்ச்சிகளின் போது ஒதுங்கி நிற்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.

ஒருவர் ஒதுங்கி நிற்பதற்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் எதிரணிக்கு நேரடியற்ற இலவச உதை கொடுக்கப்படும்.
ஒதுங்கி நிற்பதற்காக எச்சரித்து மஞ்சள் அட்டை காட்டக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக