திங்கள், 27 டிசம்பர், 2010


மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் (சிவப்பு) அட்டை

ஒரு விளையாட்டு வீரர்,

1. அதிகூடிய வலுவுடன் வன்மையாக எதிரணி வீரரை எதிர்த்து விளையாடினால்
2.எதிரணி வீரருக்குக் காயத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடினால்
3.ஒருவரை அடித்தால் (மத்தியஸ்த்தர் உட்பட)
4.ஒருவர் மீது எச்சில் துப்பினால் (மத்தியஸ்த்தர் உட்பட)
5. எதிரணி வீரர் உதைக்கும் ஒரு கோலை அல்லது கோல் செல்லும் முழுமையான சந்தர்ப்பத்தைக் கைகளினால் தடுத்தால்(கோல்க் காப்பாளரைத் தவிர)
6.விதிமுறைகளை மீறி அல்லது தவறான விளையாட்டுக்களால் கோல் உதைக்கச் செல்லும் வீரரைத் தடுத்தால் (எதிரணியினரது கோல்க் கம்பங்களுக்கு அண்மையாக)
7.ஒருவரை இழிவாகப் பேசினால் ( மத்தியஸ்த்தர் உட்பட )
8.இரண்டாவது முறையாக எச்சரிக்கை அட்டையைப் பெற்றுக் கொண்டால்

சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் வீரர் மைதானத்தின் உட்புறத்தில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக