திங்கள், 27 டிசம்பர், 2010

15. கைகளினால் எறிதல்

உதைபந்தாட்டத்தின் போது பந்து பக்கமாக இருக்கும் வெளிக்கோடுகளைத் தாண்டி மைதானத்தை விட்டு வெளியேறினால், பந்தைக் கைகளினால் மைதானத்தினுள் எறிந்து விளையாட்டுத் தொடரப்படும்.

பந்து பெளியேறு முன்னர் எந்த அணி வீரர் கடைசியாகப் பந்தை விளையாடினாரோ அவரின் எதிரணி வீரர்களால் விளையாட்டுத் தொடரப்படும்.

-பந்தை கைகளால் நேரடியாக கோல்க்கம்பங்களுக்குள் எறிந்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ள முடியாது.

-தனது கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு மூலை உதை வழங்கப்படும்

-எதிரணியின் கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு வெளி உதை வழங்கப்படும்

-கைகளால் எறியும் போது எதிரணி வீரர்கள் 2 மீ தூரத்தில் நிற்க வேண்டும்

-ஒரு விளையாட்டு வீரர் தானே பந்தைக் கைகளால் எறிந்து விட்டு உடனடியாக தானே உதைக்க முடியாது.

-அப்படி உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்

-ஒரு வீரர் பந்தைக் கைகளால் எறியும் போது அவருடைய அணியைச் சேர்ந்த கோல்க் காப்பாளர் அந்தப் பந்தைக் கைகளால் பிடிக்கக் கூடாது.

-மீறினால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக